திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை சேர்க்கை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்டத்தில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்வித் தகுதி : SSLC உயரம் : குறைந்தது 165 செ.மீ வயது வரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும் குற்ற வழக்குகள் : எந்தவித குற்ற வழக்கிலும் தொடர்பில்லாதவராக இருக்க வேண்டும் அரசியல் தொடர்பு : எந்த அரசியல் அமைப்புகளிலும் சாராதவராக இருக்க வேண்டும் முன்னுரிமை : NCC பயிற்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள்  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 02.12.2025 மாலை 5 மணிக்குள் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 45 நாட்கள் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக ஊர்க்காவல் படையில் இணைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version