தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2022-ஆம் ஆண்டு தொழில் அதிபர் சோஹைல் கட்டாரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஹன்சிகா தனது கணவரை பிரிந்துவிட்டார் என்பதற்கான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. கணவரின் வீட்டிலிருந்து வெளியேறிய ஹன்சிகா, தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கு காரணமாக, ஹன்சிகாவுக்கும் அவரது கணவர் வீட்டாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பத் தொந்தரவே கூறப்படுகிறது. மேலும், அவர் விரைவில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடலாம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் வலுத்துள்ளது. இருப்பினும் ஹன்சிகா தரப்பில் இதுவரை எந்தவொரு பதிலும் வெளியாகவில்லை.
இதேநேரத்தில், சோஹைல் கட்டாரியா தரப்பில் இருந்து ஒரு மறுப்பு வந்துள்ளது. “ஹன்சிகாவை பிரிகிறேனா? அல்லது விவாகரத்துக்கான முடிவுகள் என வரும் வதந்திகளில் உண்மையில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவொரு முற்பட்ட விளக்கமும் வராத நிலையில், அவர் விரைவில் என்ன கூறப்போகிறார் என்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.