சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்புடைய நான்கு சந்தேகப் பயங்கரவாதிகளை, குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் இரண்டு பேர் குஜராத்தில், ஒருவர் டில்லியில் மற்றும் மற்றொருவர் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி, இளைஞர்களை தாங்கள் ஈடுபட்டிருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இணைத்த முயற்சியில் இருந்தது முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து தற்போது தகவல் வெளியிடப்படவில்லை. மேலும், அவர்கள் எந்த வகையான சதித் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
“இந்த கைது நடவடிக்கை, மாநிலம் மற்றும் நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கிய முன்னேற்றமாகும்,” என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்களை சந்தித்து, கூடுதல் விவரங்களை பகிர்வதாகவும் தெரிவித்துள்ளனர்