ஜிஎஸ்டி வரி குறைப்பு – மத்திய அரசு அதிரடி திட்டம்

அனைத்து விதமான உணவுப் பொருட்கள் மற்றும் ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேபோன்று தற்போது 28 சதவீதமாக உள்ள சிமெண்ட் ஜிஎஸ்டி வரி, இனி 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி வரிக்கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்குகள் உள்ளன. ஆனால், இதனை எளிமைப்படுத்தும் வகையில் இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, வரி சீர்திருத்தம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, உணவு, ஜவுளி பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி, சலூன் மற்றும் அழகு நிலைய சேவைகளுக்கும் 18% இல் இருந்து 5% ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர்பான இறுதி முடிவு, வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version