மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தனது பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விலைகள் இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.
ஆவின் வெளியிட்ட அறிவிப்பில், நெய் மற்றும் பனீர் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் விலை மாற்றம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
நெய் (1 லிட்டர்): ரூ.690 இலிருந்து ரூ.650 ஆக குறைக்கப்பட்டது
நெய் (50 மில்லி): ரூ.45
நெய் (5 லிட்டர்): ரூ.3,300
நெய் (15 கிலோ): ரூ.10,900
பனீர் விலைகளிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது:
200 கிராம் பனீர்: ரூ.120 இலிருந்து ரூ.110
500 கிராம் பனீர்: ரூ.300 இலிருந்து ரூ.275
ஜிஎஸ்டி குறைப்பின் பலனாக, நுகர்வோருக்கு ஆவின் தயாரிப்புகள் மலிவான விலையில் கிடைக்க உள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
