புதுடில்லி :
2024-25ம் ஆண்டில், ஜிஎஸ்டி வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது இதுவரை பதிவாகியுள்ள உயர்ந்த வருவாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டான 2023-24ம் ஆண்டில், ஜிஎஸ்டி வருவாய் ரூ.20.18 லட்சம் கோடியாக இருந்தது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டு 9.4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 30, 2025 நிலவரப்படி, 1.51 கோடிக்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவுகள் செயலில் உள்ளன. டெலாய்ட் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், 85 சதவீதமான வரி செலுத்துநர்கள் ஜிஎஸ்டியுடன் நேர்மறையான அனுபவம் பெற்றதாக பதிலளித்துள்ளனர்.