செய்றது கூலி வேலை 18 கோடி ஜிஎஸ்டி வரி – அதிர்ந்து போன பிரியாணி மாஸ்டர்

திருப்பத்தூர் அருகே பிரியாணி மாஸ்டருக்கு, 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த அமீர்பாஷா, பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் அமீர் பாஷா சென்னையில் அமீர் டிரேடிங் கோ என்கிற நிறுவனம் நடத்தி அதில் 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமீர் பாஷா, பான் கார்டை வத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version