ஜிஎஸ்டி மாற்றம் : விலை குறையப்போகும் அன்றாடப் பொருட்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகளில் பெரிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 2017 முதல் நடைமுறையில் இருந்த 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த வரிகள் இனி 5% மற்றும் 18% என இரண்டு மட்டுமே இருக்கும். சில பொருட்களுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

புதிய நடைமுறைகள் செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

முழுமையாக விலக்கு: UHT பால், ரொட்டி, சப்பாத்தி, மருத்துவ/ஆயுள் காப்பீடு, கல்வி பொருட்கள்.

அன்றாடப் பொருட்கள்: பற்பசை, சோப்புகள், ஷாம்பு, கூந்தல் எண்ணெய், நொறுக்குத் தீனிகள், பால் பொருட்கள், குழந்தைகள் பாட்டில்கள், டையப்பர்கள் போன்றவை 18% அல்லது 12% இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

மருத்துவம்: உயிர்காக்கும் மருந்துகள் முற்றிலும் விலக்கு பெறுகின்றன. மருத்துவ ஆக்ஸிஜன், குளுக்கோ மீட்டர், பரிசோதனை கருவிகள் 12% இல் இருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

மின்சாதனங்கள்: ஏசி, 32 இன்ச் மேல் டிவிகள், மானிட்டர்கள், டிஷ்வாஷர்கள் 28% இல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள்: சிறிய கார்கள், மூன்று சக்கர வாகனங்கள், 350 சிசிக்கு குறைவான பைக்குகள் அனைத்தும் 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை: டிராக்டர்கள், பாகங்கள், பாசன கருவிகள், உரங்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

40% சிறப்பு ஜிஎஸ்டி: பான் மசாலா, புகையிலை, சிகரெட், சொகுசு கார்கள், 350 சிசி மேற்பட்ட பைக்குகள், தனிப்பட்ட விமானங்கள், கஃபீன் பானங்கள், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு டிக்கெட்டுகள்.

பிரதமர் மோடி, “ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்” எனவும், மாநிலங்கள் வருவாய் இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன.

Exit mobile version