பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தொடரும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைப் பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், “நல்லாட்சி, வளர்ச்சி, பொது நல நோக்கம் மற்றும் சமூக நீதி ஆகியவை வென்றுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக பீஹாரின் சகோதர சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்,” என கூறினார்.
தேர்தல் வெற்றிக்காக அயராது பணியாற்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். “எங்கள் வளர்ச்சி முயற்சிகளை மக்களிடம் கொண்டு சென்றதோடு, எதிர்க்கட்சிகளின் தவறான தகவல்களை கழித்தெறியவும் அவர்கள் விடாமுயற்சி காட்டினர்,” என பாராட்டினார்.
மேலும், வருங்காலத்தில் பீஹாரின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும், அதன் கலாசார அடையாளத்தை மேலும் உயர்த்துவதற்கும் மத்திய அரசு செயல்படும் என மோடி உறுதியளித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பீஹார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமரின் இந்த அறிக்கை, மத்திய அரசின் வளர்ச்சி நோக்கத்தை வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
