போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான், அல் நசீர் அணியின் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலி ஜார்ஜியானா ரொட்ரிகஸுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
31 வயதான ஜார்ஜியானாவை ரொனால்டோ கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளனர். திருமணம் செய்யாமல் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்து வந்த இந்நிகழ்வு, ரசிகர்களிடையே அடிக்கடி பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில், ஜார்ஜியானா தனது கைவிரலில் வைர மோதிரம் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்” என அவர் பதிவிட்டிருப்பது, இவர்களின் திருமண முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஜார்ஜியானா அணிந்திருந்த வைர மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 15 முதல் 20 காரட் எடையுடையதாக கருதப்படும் இந்த மோதிரத்தின் விலை, சுமார் ரூ.40 கோடியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.