மலர் கண்காட்சி எந்த தேதி தெரியுமா..?

ஊட்டியில் மலர் கண்காட்சி முன்னதாகவே துவங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முறை மலர் கண்காட்சி வரும் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இ-பாஸ் நடைமுறையால் ஒரே சமயத்தில் வர முடியாத நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக இம்முறை 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version