ஓபன் AI நிறுவனத்தில் அப்ளிகேஷன் CEO நியமனம்

உயர்தர செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓபன் AI, தனது செயல்பாட்டுப் பிரிவுக்கான தலைமைச் செயல் அதிகாரியாக (Application CEO) ஃபிட்ஜி சிமோவினை (வயது: 39) நியமித்துள்ளது.

இந்த புதிய நியமனத்தை நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கடந்த வியாழக்கிழமை தனது X பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அந்தப் பதிவில், “ஃபிட்ஜி சிமோவுடன் நாங்கள் பணியாற்றும் வாய்ப்பு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாம் ஆல்ட்மேன் தொடர்ந்தும் கூறியது:

“நாம் தற்போது சூப்பர் இன்டெலிஜென்ஸ் போன்ற முக்கியமான ஆராய்ச்சி துறைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எனவே பாதுகாப்பு, கணிப்பு, மற்றும் ஆராய்ச்சி போன்ற முக்கிய துறைகளில் என் கவனத்தை மையப்படுத்த, செயல்பாடுகள் தொடர்பான பொறுப்புகளின் ஒரு பகுதியை சிமோவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”

ஃபிட்ஜி சிமோ ஓபன் AI நிறுவனத்துடன் கடந்த ஒரு ஆண்டு காலமாகவே இணைந்து பணியாற்றி வருகிறார். அவர் காட்டிய அர்ப்பணிப்பு, திறமை, ஒழுங்கு ஆகியவற்றை பாராட்டும் வகையில் ஆல்ட்மேன் கூறியுள்ளார்:

“சிமோ தனித்து செயல்படும் திறனுடையவர். கடந்த வருடத்தில் அவர் அளித்த பங்களிப்பு சிறப்பானது. எதிர்காலத்தில் அதைவிட உயர்ந்த பங்களிப்பை தருவார் என உறுதியாக நம்புகிறேன்.”

யார் இந்த ஃபிட்ஜி சிமோ?

இந்த நியமனத்தின்போது தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள சிமோ,

“இத்திறமையான குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெரும் மரியாதையாகும். இந்தப் புதிய பாதையில் என் முழு அர்ப்பணிப்பையும் வழங்க விரும்புகிறேன்,” என கூறியுள்ளார்.

ஓபன் AI நிறுவனத்தின் செயல்பாடுகள் விரிவடையும் இந்த புதிய கட்டத்தில், ஃபிட்ஜி சிமோவின் தலைமைத்துவம் நிறுவத்திற்கு புதிய உயரங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version