அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணிக் அலி என்ற நபர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பின்பற்றி, அதைக் கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலை உடலில் ஊற்றி குளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாணிக் அலி தனது மனைவியுடன் சில வருடங்கள் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். இருப்பினும், மனைவி ஒரு காதலருடன் அடிக்கடி செல்லத் தொடங்கியதையடுத்து, தாமாகவே மன அழுத்தத்திற்குள்ளான மாணிக், விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினார். இருவரும் பேச்சுவார்த்தையின் மூலம் சட்டப்பூர்வமாக பிரிந்து சென்றனர்.
விவாகரத்துக்குப் பிறகு, “இன்று முதல் நான் சுதந்திரமானவன்!” என கூறிய மாணிக் அலி, குடும்ப அமைதிக்காக இதுவரை பொறுமையாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது சட்டப்படி பிரிந்து சென்றதில் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனையே ‘சுதந்திர தினம்’ எனக் குறிப்பிட்ட அவர், பால் குளியலின் மூலம் தனக்கென ஒரு கொண்டாட்டம் செய்துள்ளார்.
இந்நிகழ்வு ஒட்டுமொத்த சமூக ஊடகங்களில் வித்தியாசமான ரியாக்ஷன்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னர், ஹரியானாவைச் சேர்ந்த மஞ்சீத் என்பவர், தனது விவாகரத்தைக் கேக் வெட்டியும், விருந்துவைக்கும் முறைப்போலவும் கொண்டாடியிருந்தார். அவர் தனது முன்னாள் மனைவியின் பிரதிநிதியாக ஒரு பொம்மையை வைத்து, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து அசத்தியார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.