சோமாட்டோ மற்றும் ப்ளிங்கிட் போன்ற சேவைகளைச் செயல்படுத்தும் தாய் நிறுவமான எட்டர்னல், 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY26) ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 90% சரிவை சந்தித்து, ரூ. 25 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 253 கோடி லாபம் ஈட்டியது.
இதற்கு மாறாக, வருவாயில் 70% உயர்வு காணப்பட்டுள்ளது. Q1FY25-இல் ரூ. 4,206 கோடியாக இருந்த வருவாய், இந்த காலாண்டில் ரூ. 7,167 கோடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் எட்டர்னல் பங்குகள் 7% உயர்வுடன் ரூ. 274 வரை சென்றதாக ET அறிக்கை தெரிவிக்கிறது.
லாபத்தில் ஏற்பட்ட சரிவுக்கு, விரைவான வணிகம் மற்றும் வெளியில் செல்லும் பிரிவுகளில் (Quick Commerce & Out-of-home categories) மேற்கொள்ளப்பட்ட அதிக முதலீடுகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
B2C வணிகத்தில், நிறுவனம் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. நிகர ஆர்டர் மதிப்பு (NOV) 55% உயர்ந்து ரூ. 20,183 கோடியாக இருந்தது. முதல்முறையாக, விரைவான வணிகத்தின் NOV ஒரு முழு காலாண்டில் உணவு விநியோக NOV-ஐ விட அதிகமாக பதிவாகியுள்ளது.
B2B பிரிவில், ஹைப்பர்ப்யூர் சேவையின் வருவாய் 89% உயர்வு காண்கிறது, மேலும் காலாண்டுக்கு காலாண்டு 25% வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் காலாண்டுகளில் இந்த பிரிவில் தற்காலிக சரிவுக்கான வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.
சமீபத்திய எக்ஸ்சேஞ்ச் ஃபைலிங் தகவலின்படி, செயல்பாடுகளின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த சரிசெய்யப்பட்ட வருவாய் 67% உயர்ந்து ரூ. 7,563 கோடியாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 11வது காலாண்டு 50% மேற்பட்ட ஆண்டு தோறும் வளர்ச்சி (YoY Growth) பதிவாகும் நாளாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், வருவாய் வளர்ச்சி உறுதியளித்தாலும், வர்த்தக விரிவாக்கம் மற்றும் முதலீடுகள் காரணமாக லாபத்தில் ஏற்பட்ட குறைவு முதலீட்டாளர்களிடம் நல்ல எதிர்பார்ப்புகளுடன் பார்க்கப்படுகிறது.