அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையைப் பலப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ். (முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்) அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்தக் கட்சிக் கூண்டல் நிகழ்வு, முன்னாள் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான மாண்புமிகு நத்தம் இரா. விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது நத்தம் தொகுதி, சாணார்பட்டி ஒன்றிய கழகப் பகுதியைச் சேர்ந்த ஓ.பி.எஸ். அணியினரின் இணைப்பு விழா, நத்தம் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியம், வேம்பார்பட்டியில் உள்ள அமைச்சர் இல்லத்தில் நடைபெற்றது.
ஜான் ஜோசப்: கொசவபட்டியைச் சார்ந்த, சாணார்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் கருணாகரன்: நொச்சியோடைப்பட்டியைச் சார்ந்த, சாணார்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் மாண்ஸ்டர்: கொசவபட்டி அருளாணந்தம்: கொசவபட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன்: கவரயபட்டி மாதவன்: விராலிப்பட்டி இவர்களுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓ.பி.எஸ். அணியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் முறைப்படி இணைத்துக் கொண்டனர்.
கழகத் துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான மாண்புமிகு நத்தம் இரா. விசுவநாதன் அவர்கள், கட்சியில் இணைந்த நிர்வாகிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய அவர், “அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் வலுவான தலைமைக்குக் கீழ் கழகம் ஒன்றுபட்டு நிற்கிறது. ஓ.பி.எஸ். அணியில் இருந்து தாய் கழகம் நோக்கித் திரும்பியுள்ள உங்களது வருகை, நத்தம் தொகுதி கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும். விசுவாசத்துடனும், ஒற்றுமையுடனும் இணைந்து பணியாற்றி, கழகத்தின் வெற்றிக்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். கழகத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு, அவ்வப்போது ஓ.பி.எஸ். அணியிலிருந்த நிர்வாகிகள் பலர், இ.பி.எஸ். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிகழ்வானது, நத்தம் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி தனது ஆதரவை இழந்து வருவதையும், அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை அதன் அடித்தளத்தை மீண்டும் பலப்படுத்தி வருவதையும் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சி பலப்படுத்தும் முயற்சிகளுக்கு இந்த இணைப்பு மேலும் ஊக்கமளிக்கும்.
