புதுடில்லி : கர்நாடகாவிலும் சட்டசபை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் கமிஷன் வட்டாரங்கள், ‘ தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், ‘ எனத் தெரிவித்துள்ளது.
பீஹாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக ராகுல் கூறியதாவது: தேர்தல் கமிஷன் தனது வேலையைச் செய்ய தவறிவிட்டது. கர்நாடகாவில் ஒரு இடத்தில் மோசடியை தேர்தல் கமிஷன் அனுமதித்ததற்கான 100 சதவீத ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு தொகுதியை ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: ராகுலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. தேர்தல்வெற்றி தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டால், அதன் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பொய்யான குற்றச்சாட்டுகளை இப்போது தெரிவிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளது.