கோவை கொடிசியாவில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார். புட்டபர்த்தியில் இருந்து தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடியை, கோவை விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர். என். ரவி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கான பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவை பிரதமர் மோடி நேரடியாக பெற்றுக்கொண்டார். மனுவில் EPS வலியுறுத்திய முக்கிய கோரிக்கை: அம்மாவின் அரசு அறிவித்த இந்த இரண்டு மெட்ரோ திட்டங்களும், தமிழக வளர்ச்சிக்குக் கட்டாயமானவை என EPS மனுவில் குறிப்பிட்டுள்ளார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத்தொகை, மானியங்கள் வழங்குதல் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட்களுக்கு ஜி.எஸ்.டி 18% → 5% ஆக குறைக்குதல் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு ஜவுளி மற்றும் பின்னலாடை துறைக்கான நிவாரண மற்றும் ஊக்க நடவடிக்கைகள்
தமிழ்நாடு அரசு ஏற்கனவே மேடைப்பட்டுள்ள: கோவை மெட்ரோ விரிவான அறிக்கை (DPR) மதுரை மெட்ரோ விரிவான அறிக்கை (DPR)இவை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு, செயல்படுத்தும் விதிமுறைகள் மற்றும் கூடுதல் விளக்கங்கள் தேவையெனக் கூறி, DPR-ஐ திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு சுட்டிக்காட்டிய முக்கிய காரணம்: மெட்ரோ ரெயில் திட்டத்தை 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதன்மையாக செயல்படுத்த வேண்டும் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மக்கள்தொகை அதைவிடக் குறைவாக இருப்பதை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதாக தகவல் இதனால், இந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமரை நேரடியாக சந்தித்து EPS கோரிக்கை வைத்திருப்பது, தமிழகத்துக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மெட்ரோ திட்டங்களின் விரைவான முன்னேற்றத்தை பெற முயற்சி செய்யும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.
