“எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது” – விஜய் கருத்துக்குப் பதிலளித்த துரைமுருகன்

வேலூர் : “எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் அவர் நிருபர்களை சந்தித்து, சமீபத்திய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு :

கருணாநிதி சிலை மீது கருப்பு மை வீச்சு சம்பவம் குறித்து :
“யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான்… கருப்பு மையை ஊற்றி இருக்கான்,” என்றார் அமைச்சர்.

ரஜினிகாந்த் கருத்து குறித்து :
“புத்தக வெளியீட்டு விழாவில் சீனியர்கள் தான் தூண்கள், அவர்கள் தான் சிகரம் என்று ரஜினிகாந்த் பேசியது குறித்து உங்கள் கருத்து?” என்ற கேள்விக்கு,
“நான் பார்த்தேன். அவருக்கு நானே போன் பண்ணி ரொம்ப தேங்க்ஸ் சார், இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று சொன்னேன்,” என பதிலளித்தார் துரைமுருகன்.

விஜய்யின் விமர்சனத்துக்கு பதிலாக:
“நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள் என த.வெ.க. தலைவர் விஜய் பேசியுள்ளார். இதைப் பற்றி?” என்ற கேள்விக்கு,
“ஏன் கேள்வி கேட்பதற்கே அவர் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது,” எனக் கூறினார் துரைமுருகன்.

Exit mobile version