திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர். அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.
மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், மின்கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டிக்குரங்கைப் பொதுமக்கள் ஜே.சி.பி. உதவியுடன் மீட்டுத் தாய்க் குரங்கிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்-சேய் பாசத்தின் உச்சகட்டத்தை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை மலைக் கிராமத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு செல்லும் மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக ஒரு குட்டிக்குரங்கு சிக்கிக் கொண்டது. மின் கம்பியில் சிக்கிய அந்தக் குட்டி உயிருக்குப் போராடியதைக் கண்ட தாய்க் குரங்கு, தன்னுடைய குட்டியை மீட்க வெகு நேரமாகப் பல வழிகளில் போராடிக் கொண்டிருந்தது. தாயின் இந்தத் தவிப்பான போராட்டம் அப்பகுதிக் கிராம மக்களை மிகவும் கவர்ந்தது. குரங்கின் தவிப்பையும், மின் கம்பியின் அபாயத்தையும் உணர்ந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டனர் உடனடியாக மின்வாரியத்தைத் தொடர்புகொண்டு மின் இணைப்பைத் துண்டிப்பு செய்தனர். அருகில் இருந்த ஒரு ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்து, மின் கம்பத்தின் உயரத்திற்குச் சென்று, கம்பு மூலம் குட்டிக்குரங்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் சிக்கியிருந்த குட்டிக்குரங்கு எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டிக்குரங்கை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அது அச்சத்திலும் சோர்விலும் இருந்ததால், அதற்கு தண்ணீர் கொடுத்து அதன் அச்சத்தைப் போக்கினர்.
மீட்புப் போராட்டத்தின்போது அருகில் நின்று தவித்த தாய்க் குரங்கின் பாசப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களைக் கண்கலங்கச் செய்தது. குட்டிக்குரங்கு தண்ணீர் அருந்தி முடித்து, சற்றே இயல்பு நிலைக்கு வந்தவுடன், அங்கிருந்த தாய்க் குரங்கு விரைந்து வந்தது. தனது குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றபோது, அங்கிருந்த பொதுமக்களை நன்றி செலுத்துவது போல் பார்த்த அந்தக் காட்சி, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற பொய்யாமொழிக் கூற்றை நினைவுபடுத்தியது. மீட்கப்பட்ட குட்டிக்குரங்கைத் தூக்கிக் கொண்டு தாய்க் குரங்கு பத்திரமாகத் தோட்டப் பகுதியை நோக்கிச் சென்றது. மனிதர்களும் விலங்குகளும் இணைந்து நடத்திய இந்த மீட்புச் சம்பவமும், அதன் பின்னணியில் இருந்த தாய்மையின் பாசமும் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரது மனதைத் தொட்டுள்ளன.