AI நல்லதா ? கெட்டதா ? – உலக வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் ஏற்படுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. சுகாதாரம், சில்லறை விற்பனை, நிதி, கல்வி, படைப்பாற்றல், சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் AI தன்னிச்சையாக நுழைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலோசனை நிறுவனம் மெக்கின்சி நடத்திய சமீபத்திய ஆய்வில், 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, AI தொழில்நுட்பத்தால் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AI நிபுணர் அம்ஜத் மசாத் எச்சரிக்கை

AI வெறும் தொழிற்சாலை மற்றும் கைவினைத் தொழில்களையே பாதிக்கும் என பொதுவாக நினைக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு துறைகளில் உள்ள வெள்ளை காலர் (White-collar) வேலைகளும் அபாயத்தில் உள்ளன என்று ரெப்லிட் (Replit) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் AI நிபுணர் அம்ஜத் மசாத் வலியுறுத்துகிறார்.

‘The Diary of a CEO’ எனும் புகழ்பெற்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஸ்டீவன் பார்ட்லெட்டை நேர்காணலில் சந்தித்த அம்ஜத் மசாத்,

வாடிக்கையாளர் சேவை முதல் நிதி அறிக்கைகள் வரை

இப்போது, சில்லறை கடைகளில் சுய சேவை (Self-checkout) இயந்திரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போல், வரி கணக்கீடு, நிதி அறிக்கைகள், சட்ட ஒப்பந்தங்களின் பகுப்பாய்வு, மற்றும் ஆவண மேலாண்மை போன்ற பணிகளில் ஜெனரேட்டிவ் AI மென்பொருள்கள் பரவலாகப் பயன்படத் தொடங்கியுள்ளன.

இதன் விளைவாக, காசாளர், கணக்காளர், மற்றும் வழக்கறிஞர் போன்ற தொழில்முனைவர் வேலைகளும் எதிர்காலத்தில் குறைந்துபோகும் அபாயத்தில் உள்ளன.

டேட்டா என்ட்ரி வேலைகளுக்கு இனி இடமில்லை!

டேட்டா என்ட்ரி, தட்டச்சு, தர உறுதி சோதனை, மற்றும் தரவுகளை சரிபார்ப்பது போன்ற தொடர்ச்சியான செயல்களை AI எளிதில் ஆட்டோமேட் செய்யும் நிலையில் உள்ளது. இதனால், இத்தகைய வேலைகளும் மெதுவாகவேனும் முழுமையாக மறைந்து போகும் என அம்ஜத் மசாத் கூறுகிறார்.

பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை எச்சரிக்கை!

AI வளர்ச்சியின் வேகம் குறித்து பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவின் பிதாமகராக கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன்,

மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ், கூகுளின் சுந்தர் பிச்சை, மற்றும் ஓபன் AI நிறுவனத்தின் சாம் ஆல்ட்மன் உள்ளிட்ட பலர், AI வளர்ச்சியின் பாதை மற்றும் அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் குறித்து தீவிரமாக எச்சரித்து வருகின்றனர்.

23 லட்சம் AI புதிய வேலைவாய்ப்பு

AI தொழில்நுட்ப வளர்ச்சி வேலைகளை அழிக்கும் எனினும், அதே நேரத்தில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. Bain & Company வெளியிட்ட ஆய்வின் படி, 2027 ஆம் ஆண்டுக்குள் AI துறையில் மட்டும் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

வேலை பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழும் இந்த சூழலில், நிபுணர்கள் கூறுவது ஒன்று தான்:

Exit mobile version