தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அ.அன்வர்ராஜா, முன்னதாக அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமானவர். அ.தி.மு.க.விலிருந்து விலகிய அவர், கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி வைத்தது குறித்து அதிருப்தி வெளியிட்டதோடு, “அ.தி.மு.க. கொள்கைகளில் இருந்து தடம் புரண்டுள்ளது; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் அ.தி.மு.க.வில் இல்லை” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “இலக்கிய அணித் தலைவராகச் செயல்பட்டு வந்த புலவர் இந்திரகுமாரி அவர்களுக்குப் பதிலாக, அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version