தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்தப் பணிகள் முழுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, வாக்காளர் வீடு வீடாக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) 04.11.2025 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும், 2124 வாக்குச்சாவடியைப் பொறுத்தவரை:
04.11.2025 முதல் இதுவரை 94% வாக்காளர்களின் வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. படிவங்களை பூர்த்தி செய்து மீளப் பெறும் பணி 04.12.2025 வரை தொடரும் இந்தப் பணியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உதவி பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தேர்தல் பிரிவு பணியாளர்கள் ஆகியோர் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்: SVEEP கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு பேரணிகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவ, 22.11.2025 (சனி) மற்றும் 23.11.2025 (ஞாயிறு) ஆகிய நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
(SIR) சிறப்பு முகாம்கள் மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். “வாக்காளர் பட்டியலில் பெயர் சரியாக இருப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. எனவே, அனைத்து வாக்காளர்களும் சிறப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்தி, வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்” என்று மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
