புதுடில்லி : வீடுகளில் பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருக்க கூடாது என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) பொதுமக்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவை தவறுதலாக உட்கொள்ளப்படுவதால் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்றும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கழிவறை மற்றும் கை கழுவும் சிங்க்களில் மட்டுமே சில முக்கிய மருந்துகளைத் தூக்கி அகற்ற வேண்டியதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக அகற்ற வேண்டிய 17 மருந்துகள் :
- ஃபென்டானில் (Fentanyl)
- ஃபென்டானில் சிட்ரேட் (Fentanyl Citrate)
- மோர்பின் சல்பேட் (Morphine Sulfate)
- பப்ரெனோர்பின் (Buprenorphine)
- பப்ரெனோர்பின் ஹைட்ரோக்ளோரைடு (Buprenorphine Hydrochloride)
- மெத்தைல்பினிடேட் (Methylphenidate)
- மெபெரிடின் (Meperidine Hydrochloride)
- டையஸெபம் (Diazepam)
- ஹைட்ரோமோர்போன் ஹைட்ரோக்ளோரைடு (Hydromorphone Hydrochloride)
- மெத்தடன் ஹைட்ரோக்ளோரைடு (Methadone Hydrochloride)
- ஹைட்ரோகோடன் பிட்டர்ட்ரேட் (Hydrocodone Bitartrate)
- டபெண்டதோல் (Tapentadol)
- ஆக்ஸிமோர்போன் ஹைட்ரோக்ளோரைடு (Oxymorphone Hydrochloride)
- ஆக்ஸிகோடன் (Oxycodone)
- ஆக்ஸிகோடன் ஹைட்ரோக்ளோரைடு (Oxycodone Hydrochloride)
- சோடியம் ஆக்ஸிபேட் (Sodium Oxybate)
- ட்ரமடோல் (Tramadol)
காலாவதியான மருந்துகளை தவறான முறையில் அகற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம்
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் தவறுதலாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு
மருந்துகளின் மறுவிற்பனை அல்லது போதைப்பொருளாக தவறாக பயன்படும் சாத்தியம்
நுண்ணுயிர் எதிர்ப்பு வளர்ச்சி ஏற்படும் சூழல்
பாதுகாப்பான அகற்ற முறைகள்:
மருந்தகங்கள், மருத்துவமனைகள் வழியாக திரும்பப் பெறும் திட்டங்கள்
அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பு மையங்களில் ஒப்படைத்தல்
வழிகாட்டுதலின்படி வீட்டு கழிவறையில் மட்டும் சில மருந்துகளை கரைத்தல்
சிமென்ட், சுண்ணாம்பு கலவையில் நிரப்பி செயலிழக்கச் செய்தல்
உயர் வெப்பநிலையில் எரித்தல்
புற்றுநோய் மருந்துகள், கதிரியக்க மருந்துகள் போன்றவை தனி முறையில் அகற்றப்பட வேண்டும்
முக்கிய எச்சரிக்கை:
இந்த நடவடிக்கைகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை மருந்தகங்களின் பொறுப்பில் இருப்பதோடு, பொதுமக்களும் அவதானத்துடன் செயல்பட வேண்டும். அரசு வழிகாட்டுதல் ஆவணத்தின்படி நகர்ப்புற கழிவுகளிலும் சுற்றுச்சூழலிலும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக மருந்துகள் அகற்றப்பட வேண்டும்.