‘பறந்து போ’ படத்தை இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டினார்!

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘தரமணி’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பறந்து போ’, இதில் நடிகர் மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை பாராட்டியுள்ளார்.

தனது பாராட்டை வீடியோவில் வெளியிட்ட அவர் கூறியதாவது :

ஒரு அப்பாவாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. ராம் இயக்கும் தமிழ் படங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ‘பறந்து போ’ மிகவும் ஸ்பெஷலான படம். இந்த படம் எனக்கு மிகுந்த உளவுத்தாக்கத்தை ஏற்படுத்தியது. கதையின் தந்தை பாத்திரத்தில் அவர் சிந்தனை முறையை கண்டு நானும் அதில் பயணித்தேன்.

நடிகர் சிவா, தந்தை கதாபாத்திரத்தை மிக அழகாக, சிரமமின்றி உயிர்ப்பித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் மிக நெருக்கமாக உள்ளது.

இந்த படத்தை பார்த்த பிறகு என் குழந்தைகள் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தேன். பல காட்சிகள் ‘இப்படி இருந்திருக்கலாமே…’ என யோசிக்க வைத்தது.”

இவ்வாறு கூறி, ‘பறந்து போ’ திரைப்படத்துக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version