‘வேட்டுவம்’ படப்பிடிப்பு விபத்து : இயக்குனர் பா.ரஞ்சித் நீதிமன்றத்தில் ஆஜர்

நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் சமீபத்தில் விழுந்தமாவடி பகுதியில் படமாக்கப்பட்டன. அந்த நேரத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய மோகன்ராஜ் (வயது 52) இந்தக் காட்சியில் ஈடுபட்ட போது திடீரென விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பாக கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் ஆஜராகினார். அவரை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே இந்த வழக்கில் மூன்று பேர் முன்ஜாமின் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version