டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த இயற்கைச் சீற்றத்தை பேரிடராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டெக்சாஸில் உள்ள கர்கவுண்டி பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல வீடுகள் மற்றும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. தொடக்கத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து தற்போது 82 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காணாமற்போயுள்ளனர்.

அந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட இழப்புகளைத் தொடர்ந்து கர்கவுண்டி பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் இந்த நிலையை “அமெரிக்க பேரிடராக” அறிவித்து அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

“ஏராளமான குடும்பங்கள் கணிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். பல உயிர்கள் பறிபோயுள்ளன, இன்னும் பலரை எங்கே என்று தெரியவில்லை” என அதிபர் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாநிலத்திற்கு அதிபர் டிரம்ப் விரைவில் நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version