ரவீந்திர ஜடேஜா, பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை ஒரே நேரத்தில் விடுவித்தது சிஎஸ்கே !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2026 ஐபிஎல் சீசனுக்கான வீரர் நிலைப்பட்டியலை சமர்ப்பிக்கும் கடைசி தேதி நெருங்கியுள்ள நிலையில், ஜடேஜா மற்றும் பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.

ஜடேஜா – சஞ்சு சாம்சன் பரிமாற்றம் பெரிய கவனம்

வீரர் பரிமாற்ற பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்றன. அதன் பகுதியாக, சென்னை அணி 18 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் பெற்றுள்ளது.
இதற்குப் பதிலாக, நீண்ட காலம் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவை 14 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணிக்கு மாற்றியுள்ளது. இதன்மூலம் ஜடேஜா மீண்டும் தனது ஆரம்ப ஐபிஎல் அணியான ராஜஸ்தானில் இணைகிறார்.

சாம் கரனும் ராஜஸ்தானுக்கு

சென்னையின் மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கரனையும், 2 கோடி 40 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.

பதிரனா உட்பட 11 பேர் ரிலீஸ்

சிஎஸ்கே அணி இந்த முறை பெரிய அளவில் வீரர்களை விடுவித்துள்ளது. அதில் முக்கியமானவர் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மத்தீசா பதிரனா.
மொத்தம் 11 வீரர்கள் ரிலீஸ் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்:

தீபக் ஹூடா, நகர்கோட்டி, ஆன்ட்ரே சித்தார்த், ராகுல் திரிபாதி,ஷேக் ஹசீத்,விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, மதீசா பதிரனா, டெவான் கான்வே

ரிடென்ஷன் கடைசி தேதி நவம்பர் 16

2026 ஐபிஎல் ரிடென்ஷன் பட்டியலை சமர்ப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 16 என்பதால், அனைத்து அணிகளிலும் வீரர்கள் ரிலீஸ்–ரிடெயின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலம் இந்த மாற்றங்களுக்கு மேலும் நிறைவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version