மனைவியை கொலை செய்து தலைமறைவான CRPF வீரர் சென்னையில் கைது !

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள தாளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 41), மத்திய ரிசர்வ் போலீசுப் படையில் (CRPF) வீரராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி உமா மகேஸ்வரியை இரவு தூங்கிக்கொண்டிருந்த போது கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்ச்செல்வனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறை பிரிவுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தின் மூலம், சென்னையில் தேனாம்பேட்டையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை அப்பகுதி போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன், மேலதிக விசாரணைக்காக தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version