பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், மோசடி செய்தவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், இதுகுறித்து தனி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி பாதிக்கப்பட்ட வைப்பீட்டாளர்கள், நிதி நிறுவனம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி குறித்து 4 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டும், 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. நீதிமன்றத்திலும் காலம் கடத்துகிறார்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினரும் காலம் கடத்துகிறார்கள் என்று சண்முகம் குற்றம்சாட்டினார்.
















