உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இதில் பேசும்போது, அவர் கூறியது :
“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் காசிக்கு வருவது இதுவே முதல் முறை. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் எனது இதயத்தை துக்கத்தில் ஆழ்த்தியது. எனது மகள்களின் சிந்தூருக்காக பழிவாங்குவேன் என்று சபதம் செய்தேன். இன்று மகாதேவின் ஆசீர்வாதத்துடன் அந்த சபதத்தை நிறைவேற்றியுள்ளேன்.”
அதேநேரத்தில், அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். “பாகிஸ்தான் வருத்தத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பாகிஸ்தானின் வலியை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதியால் தாங்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் நிலையைப் பார்த்து பாகிஸ்தான் அழுவதுபோல், இங்கும் காங்கிரஸும், சமாஜ்வாதியும் அழுகின்றன,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பை வலியுறுத்தி உரையாற்றினார்