பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் நேரம் கேட்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ‘நிடி ஆயோக்’ கூட்டம் மே 24ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.

தடையற்ற அரசு நிதி உள்ளிட்ட தமிழகத்தின் நிதி தேவைகளை பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வலியுறுத்த உள்ளார். அதற்குமுன், டெல்லியில் சில முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகப் பிரமுகர்களை சந்தித்து பேசும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று இரவு அல்லது நாளை காலை பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்க முதல்வர் தரப்பில் நேரம் கோரப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தால், பிரதமருடன் பிரத்யேக சந்திப்பு நடக்கும் என தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.

நிடி ஆயோக் கூட்டம் முடிந்ததும் அதே நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பி வர உள்ளார்.

Exit mobile version