மூலிகைகளை பயன்படுத்தும் சிம்பன்சிகள் – ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு !

உகாண்டா நாட்டின் புடோங்கோ காடுகளில் வசிக்கும் சிம்பன்சி குரங்குகள், தங்களுக்கே ஏற்பட்டுள்ள காயங்களை சிகிச்சை செய்ய, இயற்கை மூலிகை தாவரங்களை பயன்படுத்துகின்றன என்பது சமீபத்திய ஒரு விஞ்ஞான ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அப்பகுதியில் சிம்பன்சிகளை தொடர்ந்து கண்காணித்தனர். அவர்களில் சிலர் காயமடைந்த பிறகு, குறிப்பிட்ட தாவரங்களின் இலைகளை மெல்லி மெல்லி சாப்பிடும் போக்கு காணப்பட்டதை பதிவு செய்துள்ளனர்.

இந்த மூலிகை தாவரங்களில் எதிர்ப்பு நோய் தன்மை (anti-inflammatory) மற்றும் கிருமி நாசினி (antibacterial) பண்புகள் உள்ளனவென்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு அருகிலான இனமாக கருதப்படும் சிம்பன்சிகள் மட்டுமல்லாமல், ஒராங்குட்டான்கள் மற்றும் கொரில்லாக்களும் இவ்வாறான இயற்கை மருந்துகளை தங்களது நலனுக்காக பயன்படுத்துவதாகவே இது ஆதாரமளிக்கிறது.

இந்த கண்டுபிடிப்பு, வனவிலங்கு மருத்துவ அறிவையும், சிம்பன்சிகளின் அறிவுத் திறனையும் புதிய கோணத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது.

Exit mobile version