பீகாரில் வாக்காளர் உரிமையை பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி “வாக்காளர் உரிமை” என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி உள்ளார்.
இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
யாத்திரையின் பல்வேறு கட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,
- ஆகஸ்ட் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பிரியங்கா காந்தி,
- ஆகஸ்ட் 27ல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,
- ஆகஸ்ட் 29ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா,
- ஆகஸ்ட் 30ல் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.