“நலம் காக்கும் ஸ்டாலின்” : ஊரகங்களுக்கு உயர்தர சிகிச்சை திட்டம் தொடக்கம் !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் புதிய மருத்துவத் திட்டத்தை சென்னை பட்டினப்பாக்கம் செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 1256 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 17 சிறப்பு மருத்துவத் துறைகளை உள்ளடக்கிய இந்த திட்டம், நகர்ப்புறத்திற்கும், ஊரகப்புறத்திற்கும் இடையேயான சிகிச்சைச் சிக்கலை குறைக்க நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

முகாம்களில் புற்றுநோய் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான வசதிகள் செய்யப்படுகின்றன. இதில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கருப்பை வாய்ப்புற்று, மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு வகை புற்றுநோய்கள் குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும். இதற்காக மக்கள் தங்கள் கிராமத்திலேயே சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வசதி குறைந்த ஊரக பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மாற்றுத் திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். முகாம்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

“நகர்ப்புறத்திற்கு இணையாக கிராமப்புற மக்களும் தரமான சிகிச்சையைப் பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்,” என முதல்வர் ஸ்டாலின் விழாவில் உரையாற்றினார்.

Exit mobile version