ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அலாஸ்காவில் சந்தித்து மூன்றரை மணிநேரம் நீண்ட முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊடகங்களை சந்தித்த டிரம்ப், “சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. விரைவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவேன். இறுதி முடிவு அவர்களிடமே உள்ளது” என தெரிவித்தார்.
இதேவேளை, ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைனுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரஷ்யாவுக்கு உண்மையான ஆர்வம் உள்ளது. ஆனால் உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கக் கூடாது. இன்றைய சந்திப்பு தீர்வுக்கான ஒரு தொடக்க புள்ளி மட்டுமே. அடுத்த முறை டிரம்பை மாஸ்கோவில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டார்.
இதற்குமுன், உக்ரைன் போர்நிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது புதின் நேரடியாக பதிலளிக்க மறுத்து, பல்வேறு முகபாவனைகளை வெளிப்படுத்தினார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

















