CBSE +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – 88.39% தேர்ச்சி!

நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டிற்கான CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்ற இந்த தேர்வுகளில், மொத்தம் 16,92,794 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு மொத்தம் 19,299 பள்ளிகளில் அமைக்கப்பட்ட 7,330 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 14,96,307 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மொத்தமாக 88.39% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 0.41% அதிகமாகும்.

மாணவர்கள் முடிவுகளை காணக்கூடிய இணையதளங்கள் :

cbseresults.nic.in

results.cbse.nic.in

cbse.gov.in

மண்டல வாரியான தேர்ச்சி விவரங்கள்:

விஜயவாடா: 99.60% (அதிகபட்சம்)

சென்னை: 97.39%

பிரயாக்ராஜ்: 79.53% (குறைவாக)

ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்ச்சி விகிதம்: பெண்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றனர். இந்த ஆண்டு 91.64% பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஆண்கள் 85.70% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், பெண்கள் ஆண்களை விட 5.94% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Exit mobile version