பீஹார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்சா பஜார் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் வேகமாக வந்த கார், லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த துயர சம்பவம், அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் பயணம் செய்வது எவ்வளவு அபாயகரம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்துகிறது. சிறிதளவு தூக்க கலக்கமே கூட பெரும் விபத்துக்கு காரணமாக முடியும் என்பதால், ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சாலை பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.
பீஹாரில் 5 உயிர்களை பலிகொண்ட இந்த சாலை விபத்து, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
