காசநோய் என்பது தீவிரமான தொற்றுநோய். இது மனிதர்களையும் நாய்களையும் பாதிக்கக்கூடியது. மருத்துவர்கள், வீட்டில் வளர்க்கும் நாய்களோ அல்லது தெருநாய்களோ காசநோயால் பாதிக்கப்பட்டால், நெருங்கிப் பழகுவதால் மனிதருக்கும் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் மூலம் பரவும் தொற்றுநோய். மனிதர்களுக்கு இது இருமல், உடல் எடை குறைதல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிகிறது. அதேபோல் நாய்களும் இதே அறிகுறிகளை காட்டுவர். நாய்களில் காசநோய், மற்ற நாய்களோ அல்லது மனிதர்களிடமிருந்து பரவும்; இது Bovine TB அல்லது Mycobacterium TB என்றும் அழைக்கப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவதாவது, காசநோய் பாதிக்கப்பட்ட நாய்களுடன் நெருங்கிக் பழகினால் அல்லது அவர்களுக்கு உணவு வைக்கும்போது, நாய்கள் நாவால் தொடர்பு கொண்டால் மனிதருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு வழிகள் :
காசநோய் அறிகுறிகள் காணப்படும் நாய்களை உடனே வெட்னரி மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை வழங்க வேண்டும்.
சிகிச்சை நடக்கும் போது நாயை தனிமையில் வைக்க வேண்டும்.
தெருநாய்களிடம் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், விலங்குகள் நல ஆர்வலர்கள் அல்லது அரசு விலங்குகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்களின் ஆரோக்கியத்தையும், உங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய நாய்களிடம் இருந்து பாதுகாப்பாக தூரம் வைப்பது அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 
			















