புதுடில்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
68 வயதான ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி தேர்தலில் 452 ஓட்டுகளை பெற்று, ‘இண்டி’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை தோற்கடித்தார். அதன் பின்னர், இன்று டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராதாகிருஷ்ணனிடம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இவ்விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.