பிரதமர் மோடியை சந்தித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

ஜக்தீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியாகியுள்ள துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேஜ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்ததுடன் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என தெரிவித்தார்.

அதேபோல், பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில், “தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்தினேன். அவரது நீண்டகால பொது சேவை அனுபவம் நாட்டிற்கு பெரும் பலன்களை வழங்கும். அவர் காட்டிய அர்ப்பணிப்பு, உறுதியுடன் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version