அல்ஜீரியாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து ; 18 பேர் பலி

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ் அருகே நேற்று இந்த சோக விபத்து நிகழ்ந்தது. ஆற்றைக் கடக்கும் போது, அதிவேகமாக சென்ற பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று, நீண்ட நேரம் போராடி உயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து அல்ஜீரிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.

Exit mobile version