தென்னிந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை அறிமுகமாகும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் சேவை வர இருக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த புல்லட் ரயில் ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும். இந்த பாதையில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது மிகப் பெரிய சந்தையாக மாறும். இந்த திட்டம் நிச்சயம் நடைமுறைக்கு வரும்,” என்றார்.
முன்னதாக, மும்பை–ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2027ம் ஆண்டுக்குள் அது நிறைவு பெறும் எனவும், குஜராத்தில் பல நிலைய கட்டுமானங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.