சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:
“எனது வீட்டில், நான் உட்காரும் இடத்தில், நாற்காலியின் அருகே ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது. அதை நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர கருவியாகும். சாதாரண விலை அல்ல; மிகவும் உயர்விலை மிக்கது,” என்றார்.
“யார் அந்த கருவியை வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள்? என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருகிறோம்,” என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
இக்கருவி வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அது தனி நபர் மற்றும் அரசியல் தகவல்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு தரப்பில் இது பெரும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.