கூவம் ஆற்றோரத்தில் இளைஞர் சடலம் : ஆந்திர அரசியலை உலுக்கிய கொலை வழக்கு !

சென்னை :
சென்னை கூவம் ஆற்றோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இளைஞரின் சடலம், ஆந்திராவின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (வயது 22) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு சடலமாக தூக்கி வீசப்பட்ட சம்பவம், ஜனசேனா கட்சி உறுப்பினர்கள் கைது செய்யும் அளவிற்கு போனது.

சென்னை எம்.எஸ்.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த 8ஆம் தேதி 25 வயது இளைஞரின் சடலம் கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது. ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிசிடிவி ஆதாரங்கள் மூலம் போலீசார் விசாரணையில், திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்கிற ராயுடு, ஒரு கும்பலால் காரில் கொண்டு வந்து கூவம் ஆற்றில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து, ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, ஐ.டி. விங் நிர்வாகி சிவக்குமார், உதவியாளர் கோபி மற்றும் கார் ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், ராயுடு கடந்த 2019 முதல் விணுதாவின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்ததும், ஒரு நாள் அவரது படுக்கையறையில் தொலைபேசியில் அவதார புகைப்படங்களை ரகசியமாக பதிவு செய்ததும், அந்த தகவல் கையாளப்பட்ட விதமும் தெரியவந்துள்ளது. மேலும், ராயுடு இந்த செயலை தெலுங்கு தேசம் கட்சியின் காளஹஸ்திரி தொகுதி எம்.எல்.ஏ. பஜாலா சுதீர் ரெட்டியின் தூண்டுதலால் செய்ததாக கூறியதாகவும், இதே காரணமாகவே கடுமையான சித்ரவதை செய்யபட்டதாகவும் தெரிகிறது.

விணுதா மற்றும் அவரது கணவர், ராயுடுவை வீட்டில் அடைத்து வைக்கும்போது அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதனை மறைக்க அவரது உடலை காரில் கொண்டு வந்து கூவம் ஆற்றோரத்தில் வீசி விட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


ஏழுகிணறு போலீசார் தற்போது ஆந்திர போலீசாருடன் இணைந்து சித்ரவதை செய்யப்பட்ட இடத்திலான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அருண், இது ஒரு திட்டமிட்ட கொலைவழக்காக கருதப்படுவதாகவும், இது தொடர்பாக ஜனசேனா கட்சி உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Exit mobile version