சேலம் அயோத்தியாபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் பாஜக கட்சியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்ட அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் …
பேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணிகளை சிதைக்க திட்டம் நடைபெற்று வருகிறது அதற்காகத்தான் நிறைய சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவர்கள் யாரும் பலியாக மாட்டார்கள் ஐயா ராமதாஸ் அவர்கள் மிகச் சிறப்பாக சொல்லியுள்ளார் தேர்தல் வரும் நேரத்தில் எங்களுடைய கட்சி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று கூறியுள்ளார் இப்பொழுது
செல்வப் பெருந்தகை என்ன சொல்கிறார் திருமாவளவன் என்ன சொல்கிறார் எங்களைப் பொறுத்தவரை தேர்தலில்
வெல்வதற்கு பூத்த அளவில் எங்களின் மக்களை தயார் செய்வதும் எளிய மக்களுக்கு பிரதமரின் நலத்திட்டங்களை இன்னும் வேகமாக கொண்டு சேர்ப்பது எங்களுடைய நிலைப்பாடாக உள்ளது
சூழ்ச்சியாளர்கள் எதை பேசினாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை
இதற்கு பல தலைவர்கள் பதில் சொல்லியுள்ளார்கள் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு என்பது இந்து முன்னணி அமைப்பின் மாநாடு அந்த அமைப்பின் கடந்த காலத்தில் என்னவெல்லாம் பேசி வந்தார்கள் அவருடைய கொள்கைகளாக எதைச் சொல்லி வந்திருக்கிறார்களோ அதை தான் அந்த மாநாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள் புதியதாக எதுவும் சொல்லவில்லை பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி அதிமுக கட்சியும் இந்து முன்னணியின் அழைப்பின் பெயரில் சென்று கலந்து கொண்டனர் முருக பக்தர்கள் மாநாடு அது ஒன்றும் அரசியல் மாநாடு கிடையாது அவர்கள் கடந்த காலத்தின் நிகழ்வுகளை பற்றி பேசும்பொழுது இரண்டு மூன்று செகண்ட் பேசிய செய்தியை பிடித்துக் கொண்டு எப்படியாவது தவறான பிரச்சாரத்தை செய்து விடலாம் என்ற சூழ்ச்சியை செய்து வருகின்றனர் அவர்களின் பிரச்சார யுக்தி எடுபடாது
சீமான் சொல்லக்கூடிய வசனத்தை நாம் பயன்படுத்தலாம் நீ என்னப்பா லூசு? என்ன வேணாலும் பேசலாம் எங்களுக்கு யோசிச்சு பேச வேண்டிய பொறுப்பு இருக்கு ஐயா ஸ்டாலின் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் மதி மயக்கத்தில் இருக்கிறாரா அல்லது தமிழக மக்களின் மனநிலை தெரியாமல் இருக்கிறாரா அவர் மனம் குழம்பி போய் உள்ளாரா என்பது புரியவில்லை அவர் பேசுவது போல் நாங்கள் பேச முடியாது நாங்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்துள்ளோம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் திமுக என்ற இந்த ஊழல் பேரிசாளிகளை வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும் என்று மக்கள் எண்ணியுள்ளனர் நிச்சயம் 2026 இல் ஆட்சி மாற்றம் நடைபெறும் திமுகவை சேர்ந்த இருபது பேராவது சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்திற்குள் வருவார்களா என்பதை ஸ்டாலின் யோசித்துப் பார்க்க வேண்டும் என்றார்
போகாத வழியில்
டயர் இல்லாத பஸ்ஸில் 70 கிலோமீட்டர் வேகத்தில் எப்படி ஓட்டுவோம் என்று சொன்னால் அது எப்படி நகைச்சுவை போல இருக்குமோ முட்டாள்தனமாக இருக்குமோ
அதுபோல முதலமைச்சரின் பேச்சு முட்டாள்தனமாக உள்ளது என்ற ஒரு பகிரங்க குற்றச்சாட்டையும் பதிவு செய்ய விரும்புகிறேன் என்னுடைய வார்த்தை கடினமாக இருந்தாலும் நீட் என்ற தேர்வின் மூலமாக மாணவர்களை 10க்கும் மேற்பட்டவர்களை பலி கொடுத்து பாடையில் தூக்கிக் கொண்டு போகும் போது அதை வைத்து பதவிக்காக அரசியல் ஆதாயம் தேடி ஸ்டாலின் அவர்களின் மகன் சென்று 10 லட்சம் நிதி கொடுத்து கண்ணீர் விட்ட காட்சிகள் நாங்கள் மறந்துவிடவில்லை மாணவர்களை தட்டிக் கொடுத்து நன்றாக படிக்க வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டிய ஒரு ஆட்சியாளர்கள் அயோக்கியத்தனமாக பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு நீட் தேர்வில் ஏராளமானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் பழங்குடியின மாணவர்கள் ஆட்டோ டிரைவரின் பிள்ளைகள் வெற்றி பெற்றுள்ளனர் மருத்துவராக மாறி படித்துள்ளனர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சாதனை அந்த சாதனையை பொறுக்க முடியாமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று பேசினார்