“தேர்தல் கமிஷனை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது” என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து, ஸ்டாலின் கூறியதாவது:
“பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல; மக்களின் ஆணையைத் திருடும் திட்டமிட்ட சதி. எனது சகோதரரும், லோக்சபா தலைவருமான ராகுல் வழங்கிய ஓட்டு திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன.
ராகுல், இண்டி கூட்டணியின் எம்.பி.களை ஒருங்கிணைத்து, பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் கமிஷனுக்கு பேரணியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு, அதில் நடக்கும் அரசியல் ரீதியான மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது ஜனநாயகத்தை அழிக்கும் இந்தச் செயல் குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். திமுக இந்தப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்று போராடும். பாஜக இந்தியாவின் ஜனநாயகத்தை பகலில் கொள்ளையடிப்பதை அமைதியாகப் பார்க்க மாட்டோம்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.