பீஹார் சட்டசபை தேர்தல் களம் இன்று மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக இண்டி கூட்டணி தேஜஸ்வி யாதவை அறிவித்துள்ளது.
நவம்பர் 6 மற்றும் 11ம் தேதி இரு கட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கடுமையான மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில், இப்போது அனைத்து குழப்பமும் தீர்ந்து, தெளிவான முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் வேட்பாளராக வி.ஐ.பி., கட்சியின் சஹானி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே சமயத்தில், ஆளும் தேஜ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தேர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் முழுமையாக இறங்கியுள்ள நிலையில், பீஹார் தேர்தல் களம் இப்போது பரபரப்பாக மாற்றம் பெற்றுள்ளது

















