243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்றது. அரசு அமைக்க குறைந்தது 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் மற்றும் ஜன் சுராஜ் கட்சி என கடுமையான மும்முனைப் போட்டி நடந்தது.
வாக்கு எண்ணிக்கையில் NDA அதிரடி
நவம்பர் 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் மீறி பாஜக–ஜெடியூ இணைந்து செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ராக்கோபூரில் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் வெற்றி
I.N.D.I.A கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது பாரம்பரியமான ராகோபூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரை 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் இதே வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றிருந்த தேஜஸ்வி, இந்தத் தேர்தலிலும் தனது தொடர்ச்சியை நிலைநாட்டியுள்ளார்.
