2025 ஆசியக்கோப்பை தொடரை முடித்துக்கொண்ட இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் எதிரான சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், துணைக் கேப்டன் ரவீந்திர ஜடேஜா. அணியில் புதிய முகங்கள் ஜகதீசன் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் முக்கிய அங்கமாக இருந்த கருண் நாயர் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தொடரில் இடம் பெறவில்லை. குறிப்பாக, கருண் நாயர் கடந்த சில போட்டிகளில் மோசமான ரன்கள் பதிவு செய்ததால் நீக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரன் வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), என். ஜகதீசன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும், இரண்டாவது டெஸ்ட் டெல்லியில் அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது.