காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறைக் காலத்தில் எந்தவித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இன்று காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் அக்டோபர் 5 வரை ஒன்பது நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நேரத்தில் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும் வகுப்புகளை நடத்தக்கூடாது என அதிகாரப்பூர்வமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள இயக்குநரகம், இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Exit mobile version